திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 396

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்பருவங்கள் தோறும் பயன்பல வானதிருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.

உரை

பரம்பொருள் அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தால் சிவமாகவும் சக்தியாகவும் வெளிப்பட்டு, இருவரின் திருவிளையாடலால் அனைத்தும் உருவாகின்றன. அப்படி உருவாகிய அனைத்தும் காலத்திற்கு ஏற்றபடியும் அவை அடைந்த பக்குவத்திற்கு ஏற்றபடியும் பலவகையான வினைப்பயன்களைப் பெறும். எப்போது இறைவனது திருவிளையாட்டால் உருவாகிய ஒன்று இறைவனிடமே சென்று சேர்கின்றதோ, அப்போது அதன் உலக வாழ்க்கை முற்றுப் பெற்றுவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    பரம்பொருள் அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தால் சிவமாகவும் சக்தியாகவும் வெளிப்படுகின்றது.

  • வரி 2

    இருவரின் திருவிளையாடலால் அனைத்தும் உருவாகின்றன.

  • வரி 3

    அப்படி உருவாகிய அனைத்தும் காலத்திற்கு ஏற்றபடியும் அவை அடைந்த பக்குவத்திற்கு ஏற்றபடியும் பலவகையான வினைப்பயன்களைப் பெறும்.

  • வரி 4

    எப்போது இறைவனது திருவிளையாட்டால் உருவாகிய ஒன்று இறைவனிடமே சென்று சேர்கின்றதோ, அப்போது அதன் உலக வாழ்க்கை முற்றுப் பெற்றுவிடும்.

திருமந்திரம் பாடல் #396

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout