திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 395

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகின்ற தன்மையி லக்கணி கொன்றையன்வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்போகின்ற சீவன் புகுந்துட லாயுளன்ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.

உரை

எலும்புகளை அணிந்து கொன்றை மலரைச் சூடியிருக்கும் சிவபெருமான், உலகத்தில் நிகழும் அனைத்துத் தொழில்களின் தன்மையாகவும் இருக்கின்றான். உருகுகின்ற தங்கம் போன்ற மினுமினுப்பான உடல் கொண்டவன் அவன். பிறவிக்குச் செல்லும் உயிர்கள் வாழும் உடலாகவும் அவனே இருக்கின்றான். பிறவி எடுத்த உயிருக்கு நிகழும் தன்மையிலும் அவனே கலந்திருந்து துணையாக இருப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    எலும்புகளை அணிந்து கொன்றை மலரைச் சூடியிருக்கும் சிவபெருமான், உலகத்தில் நிகழும் அனைத்துத் தொழில்களின் தன்மையாகவும் இருக்கின்றான்.

  • வரி 2

    உருகுகின்ற தங்கம் போன்ற மினுமினுப்பான உடல் கொண்டவன் அவன்.

  • வரி 3

    பிறவிக்குச் செல்லும் உயிர்கள் வாழும் உடலாகவும் அவனே இருக்கின்றான்.

  • வரி 4

    பிறவி எடுத்த உயிருக்கு நிகழும் தன்மையிலும் அவனே கலந்திருந்து துணையாக இருப்பான்.

திருமந்திரம் பாடல் #395

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout