திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 394

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்ஒன்றுயி ராக்கும் அளவை உடலுறமுன்துய ராக்கும் உடற்குந் துணையதாநன்றுஉயிர்ப் பானே நடுவுநின் றானே.

உரை

உடலில் ஆன்மாவை வைத்து உயிராக மாற்றுபவன் என் ஆருயிராகிய இறைவனே. உயிர்களிடத்தில் கொண்ட மாபெரும் கருணையினால், உடலில் இணைந்த ஆன்மாவுடன் உயிராகக் கலந்திருக்கின்றான். முன்பிறவியின் வினைகளைத் தீர்க்க வேண்டிப் பிறவி எடுத்த அந்த உயிரின் காலம் முடியும் வரை, அது செய்யும் எந்தச் செயலிலும் தலையிடாமல் நடுநிலையாக நின்று கவனித்துக் கொண்டு, அந்த உயிர் வாழவேண்டிய காலம் வரை அதன் உடலோடு ஒன்றாகக் கலந்து நன்றாகக் காத்துக்கொண்டு நிற்கின்றான் இறைவன்.

வரி வாரியாக

  • வரி 1

    உடலில் ஆன்மாவை வைத்து உயிராக மாற்றுபவன் என் ஆருயிராகிய இறைவனே.

  • வரி 2

    உயிர்களிடத்தில் கொண்ட மாபெரும் கருணையினால், உடலில் இணைந்த ஆன்மாவுடன் உயிராகக் கலந்திருக்கின்றான்.

  • வரி 3

    முன்பிறவியின் வினைகளைத் தீர்க்க வேண்டிப் பிறவி எடுத்த அந்த உயிரின் காலம் முடியும் வரை, அது செய்யும் எந்தச் செயலிலும் தலையிடாமல் நடுநிலையாக நின்று கவனித்துக் கொள்கின்றான்.

  • வரி 4

    அந்த உயிர் வாழவேண்டிய காலம் வரை அதன் உடலோடு ஒன்றாகக் கலந்து, நன்றாகக் காத்துக்கொண்டு நிற்கின்றான் இறைவன்.

திருமந்திரம் பாடல் #394

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout