திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 392

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

பயன்எளி தாம்பரு மாமணி செய்யநயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டுஅயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்பயன்எளி தாம்வய ணந்தெளிந் தேனே.

உரை

எல்லாப் பயன்களையும் எளிதில் அளிக்கவல்லதும், பேரின்பத்தை வழங்கவல்லதும், நம்பிக்கைக்கு உரியதுமான ஒரு மாணிக்கக் கல் இருக்கிறது. அந்த மாணிக்கக் கல்லே உயிர்களைப் படைக்கும் பிரமனுக்கு ஒளியாக இருந்து வழிகாட்டுகின்றது. அந்த மாணிக்கக் கல்லாக இறைவன் இருக்கும் காரணத்தை நாம் அறிந்து தெளிந்துகொண்டோம்.

வரி வாரியாக

  • வரி 1

    எல்லாப் பயன்களையும் எளிதில் அளிக்கவல்லதும்,

  • வரி 2

    பேரின்பத்தை வழங்கவல்லதும், நம்பிக்கைக்கு உரியதுமான ஒரு மாணிக்கக் கல் இருக்கிறது.

  • வரி 3

    அந்த மாணிக்கக் கல்லே உயிர்களைப் படைக்கும் பிரமனுக்கு ஒளியாக இருந்து வழிகாட்டுகின்றது.

  • வரி 4

    அந்த மாணிக்கக் கல்லாக இறைவன் இருக்கும் காரணத்தை நாம் அறிந்து தெளிந்துகொண்டோம்.

திருமந்திரம் பாடல் #392

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout