திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 391

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்ஆரணனு மாய்உல காய்அமர்ந் தானே.

உரை

அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாகக் காரணமானவனாகிய சதாசிவமூர்த்தி, அனைத்திலும் அன்பாகக் கலந்திருக்கின்றான். அண்ட சராசரங்கள் அனைத்திலும் உடலாக இருக்கும் பொருள்கள் அனைத்தையும் தாங்கிக் காப்பாற்றி நிற்கும் திருமாலாகவும் அவனே இருக்கின்றான். அந்த அண்ட சராசரங்கள் அனைத்திலும் உயிர்களை அன்போடு வேதங்கள் ஓதி உருவாக்கும், நான்கு முகங்களைக் கொண்ட பிரமனாகவும் அவனே இருக்கின்றான். அண்ட சராசரங்கள் அனைத்துமாகவும், அவற்றிலிருக்கும் பொருள்களாகவும், அவற்றில் வாழும் உயிர்களாகவும் இருந்து, அன்பினால் கட்டி வைத்திருப்பவன் சதாசிவமூர்த்தியாகிய இறைவனே.

வரி வாரியாக

  • வரி 1

    அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாகக் காரணமானவனாகிய சதாசிவமூர்த்தி, அனைத்திலும் அன்பாகக் கலந்திருக்கின்றான்.

  • வரி 2

    அண்ட சராசரங்கள் அனைத்திலும் உடலாக இருக்கும் பொருள்கள் அனைத்தையும் தாங்கிக் காப்பாற்றி நிற்கும் திருமாலாகவும் அவனே இருக்கின்றான்.

  • வரி 3

    அந்த அண்ட சராசரங்கள் அனைத்திலும் உயிர்களை அன்போடு வேதங்கள் ஓதி உருவாக்கும், நான்கு முகங்களைக் கொண்ட பிரமனாகவும் அவனே இருக்கின்றான்.

  • வரி 4

    அண்ட சராசரங்கள் அனைத்துமாகவும், அவற்றிலிருக்கும் பொருள்களாகவும், அவற்றில் வாழும் உயிர்களாகவும் இருந்து, அன்பினால் கட்டி வைத்திருப்பவன் சதாசிவமூர்த்தியாகிய இறைவனே.

திருமந்திரம் பாடல் #391

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout