தொடர்ந்து படிக்கread this section continuously
ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்பாங்குஆர் கயிலைப் பராபரன் தானும்வீங்குங் கமல மலர்மிசை மேலயன்ஆங்குஉயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.
உரைmeaning
ஓங்கிய பாற்கடலின்மேல் இருக்கும் திருமாலும், அழகிய கயிலை மலையின்மேல் இருக்கும் பரம்பொருளான சிவபெருமானும், மலர்ந்து விரிந்திருக்கின்ற தாமரை மலரின்மேல் இருக்கும் பிரமனும், ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆன்மாவை வைக்கின்ற மூலப்பொருளான சதாசிவமூர்த்தியை உணர்ந்திருக்கின்றார்கள். பிரமன் படைத்தலும், திருமால் காத்தலும், சிவன் அழித்தலும் செய்யும் உயிர்கள் அனைத்திலும் ஆன்மாவாக இருப்பது சதாசிவமூர்த்தியே என்பதை மூவருமே உணர்ந்திருக்கின்றார்கள்.
Thirumal, who dwells upon the towering ocean of milk, and Sivaperuman, the supreme being who dwells upon the beautiful mount Kailash, and Brahma, who dwells upon the lotus flower that has bloomed and opened wide, have all realized Sadashivamurthi, the root substance who places the soul within every living being. Brahma creates, Thirumal protects, and Sivan destroys, and all three of them have realized that it is Sadashivamurthi himself who abides as the soul within all the beings on whom they act.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஓங்கிய பாற்கடலின்மேல் இருக்கும் திருமாலும், அழகிய கயிலை மலையின்மேல் இருக்கும் பரம்பொருளான சிவபெருமானும்,
Thirumal, who dwells upon the towering ocean of milk, and Sivaperuman, the supreme being who dwells upon the beautiful mount Kailash,
- வரி 2Line 2
மலர்ந்து விரிந்திருக்கின்ற தாமரை மலரின்மேல் இருக்கும் பிரமனும், ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆன்மாவை வைக்கின்ற மூலப்பொருளான சதாசிவமூர்த்தியை உணர்ந்திருக்கின்றார்கள்.
and Brahma, who dwells upon the lotus flower that has bloomed and opened wide, have all realized Sadashivamurthi, the root substance who places the soul within every living being.
- வரி 3Line 3
பிரமன் படைத்தலும், திருமால் காத்தலும், சிவன் அழித்தலும் செய்கின்றனர்.
Brahma creates, Thirumal protects, and Sivan destroys.
- வரி 4Line 4
இப்படி அவர்கள் செயல்படுகின்ற உயிர்கள் அனைத்திலும் ஆன்மாவாக இருப்பது சதாசிவமூர்த்தியே என்பதை மூவருமே உணர்ந்திருக்கின்றார்கள்.
and all three of them have realized that it is Sadashivamurthi himself who abides as the soul within all the beings on whom they act.
திருமந்திரம் பாடல் #390





