தொடர்ந்து படிக்கread this section continuously
உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகிஅண்டத் தமரர் தலைவனும் ஆதியும்கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்பண்டுஇவ் வுலகம் படைக்கும் பொருளே.
உரைmeaning
ஏழு உலகங்களையும் காப்பாற்றிப் பின்னர் வெளிப்படுத்திய திருமாலும், அண்டங்கள் அனைத்திலும் இருக்கின்ற தேவர்களின் தலைவனாகவும் ஆதிமூல நாயகனாகவும் விளங்குகின்ற சிவபெருமானும், கர்வத்தால் தன் ஐந்து தலைகளில் ஒன்றை இறைவனால் கொய்யப்பட்டு நான்கு முகங்களை மட்டுமே கொண்டவனான பிரமனும் ஆகிய இம்மூவருடனும் கலந்திருந்து, பழமை வாய்ந்த இந்த உலகங்கள் அனைத்தையும் படைக்கும் பரம்பொருள் சதாசிவமூர்த்தி ஒருவனே ஆவான்.
Thirumal, who protected the seven worlds and afterward brought them forth, and Sivaperuman, who stands as the leader of the celestials in all the worlds and as the primal source, and Brahma, who through pride had one of his five heads severed by God and has since had only four faces, these three: God, mingled together with all three of them, the supreme being Sadashivamurthi alone creates all these worlds of great antiquity.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஏழு உலகங்களையும் காப்பாற்றிப் பின்னர் வெளிப்படுத்திய திருமாலும்,
Thirumal, who protected the seven worlds and afterward brought them forth,
- வரி 2Line 2
அண்டங்கள் அனைத்திலும் இருக்கின்ற தேவர்களின் தலைவனாகவும் ஆதிமூல நாயகனாகவும் விளங்குகின்ற சிவபெருமானும்,
and Sivaperuman, who stands as the leader of the celestials in all the worlds and as the primal source,
- வரி 3Line 3
கர்வத்தால் தன் ஐந்து தலைகளில் ஒன்றை இறைவனால் கொய்யப்பட்டு நான்கு முகங்களை மட்டுமே கொண்டவனான பிரமனும் ஆகிய இம்மூவருடனும் கலந்திருந்து,
and Brahma, who through pride had one of his five heads severed by God and has since had only four faces, these three: God, mingled together with all three of them,
- வரி 4Line 4
பழமை வாய்ந்த இந்த உலகங்கள் அனைத்தையும் படைக்கும் பரம்பொருள் சதாசிவமூர்த்தி ஒருவனே ஆவான்.
the supreme being Sadashivamurthi alone creates all these worlds of great antiquity.
திருமந்திரம் பாடல் #389





