திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 387

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.

உரை

குளிர்ந்த நீரையும் மண்ணையும் படைத்து, அவற்றிற்கான தன்மைகளைக் குருவாக இருந்து சதாசிவமூர்த்தி கொடுக்கின்றார். அதன்மூலம் நல்வினைகளை அருளி, சதாசிவமூர்த்தியுடன் ஒன்றாகச் சேர்ந்து, உலகங்கள் அனைத்திலும் நீரையும் மண்ணையும் சக்தி வளர்க்கின்றாள். சதாசிவமூர்த்தியின் அசையும் சக்தியான எண்ணத்திலே உதித்த கருத்து, சிவத்துடன் கலந்து மண்ணாகவும், சக்தியோடு கலந்து நீராகவும் ஆகி, இரண்டும் கலந்து உலகங்களாகவும் மாறுகின்றது. இப்படி, மலரில் கலந்திருக்கும் வாசனை போல, சிவமும் சக்தியும் உலகமெங்கும் ஒன்றாகக் கலந்தேயிருக்கின்றன.

வரி வாரியாக

  • வரி 1

    குளிர்ந்த நீரையும் மண்ணையும் படைத்து, அவற்றிற்கான தன்மைகளைக் குருவாக இருந்து சதாசிவமூர்த்தி கொடுக்கின்றார்.

  • வரி 2

    அதன்மூலம் நல்வினைகளை அருளி, சதாசிவமூர்த்தியுடன் ஒன்றாகச் சேர்ந்து, உலகங்கள் அனைத்திலும் நீரையும் மண்ணையும் சக்தி வளர்க்கின்றாள்.

  • வரி 3

    சதாசிவமூர்த்தியின் அசையும் சக்தியான எண்ணத்திலே உதித்த கருத்து, சிவத்துடன் கலந்து மண்ணாகவும், சக்தியோடு கலந்து நீராகவும் ஆகி, இரண்டும் கலந்து உலகங்களாகவும் மாறுகின்றது.

  • வரி 4

    இப்படி, மலரில் கலந்திருக்கும் வாசனை போல, சிவமும் சக்தியும் உலகமெங்கும் ஒன்றாகக் கலந்தேயிருக்கின்றன.

திருமந்திரம் பாடல் #387

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout