தொடர்ந்து படிக்கread this section continuously
புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்திபுவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்புவனம் படைப்பானும் பூமிசை யானாய்புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.
உரைmeaning
உலகங்களைப் படைப்பது ஒலியாகிய சிவமும் ஒளியாகிய சக்தியுமே. அந்த உலகங்களில் பல தொழில்களைப் புரிவதற்காக, அவர்களுடைய சக்தியிலிருந்து தோன்றிய பிள்ளைகள் ஐவர். அனைத்தையும் படைப்பதற்குக் காரணமான சதாசிவமூர்த்தியே, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் வீற்றிருந்து, உலகங்கள் அனைத்துமாகவும் அவற்றிலிருக்கும் உயிர்கள் அனைத்துமாகவும் இருக்கின்றான்.
The making of the worlds is the work of Sivam, who is sound, and Sakthi, who is light. To carry out the many functions within those worlds, five children were born of their power. Sadashivamurthi, who is the cause behind all creation, himself sits enthroned on the thousand-petalled lotus, and is himself all the worlds and all the beings that live within them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகங்களைப் படைப்பது ஒலியாகிய சிவமும் ஒளியாகிய சக்தியுமே.
The making of the worlds is the work of Sivam, who is sound, and Sakthi, who is light.
- வரி 2Line 2
அந்த உலகங்களில் பல தொழில்களைப் புரிவதற்காக, அவர்களுடைய சக்தியிலிருந்து தோன்றிய பிள்ளைகள் ஐவர்.
To carry out the many functions within those worlds, five children were born of their power.
- வரி 3Line 3
அனைத்தையும் படைப்பதற்குக் காரணமான சதாசிவமூர்த்தியே, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் வீற்றிருந்து,
Sadashivamurthi, who is the cause behind all creation, himself sits enthroned on the thousand-petalled lotus,
- வரி 4Line 4
உலகங்கள் அனைத்துமாகவும் அவற்றிலிருக்கும் உயிர்கள் அனைத்துமாகவும் இருக்கின்றான்.
and is himself all the worlds and all the beings that live within them.
திருமந்திரம் பாடல் #386





