தொடர்ந்து படிக்கread this section continuously
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசைஅற்றம் உரையான் அறநெறிக் கல்லதுஉற்றுங் களால்ஒன்றும் ஈந்தது வேதுணைமற்றுஅண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.
உரைmeaning
இறைவனின் திருவடிகளையே பற்றிக்கொண்டு, உலகத்தில் உண்மையையே பேசி, குற்றமும் குறையும் கூறாமல் அறநெறியிலேயே நடப்பதோடு, நம்மால் இயன்றதை வேண்டுகின்றவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதும் ஆகிய இவையே முக்தி பெற்று இறைவனை அடைவதற்கு இறைவனே வகுத்த வழிகள் என்பதை அறிந்து, அந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாழுங்கள்.
Holding fast only to God's holy feet, speaking only the truth in this world, walking always the path of dharma without finding fault or blame, and willingly giving what we can to those who ask it of us, know that these are the ways God himself has laid down for reaching liberation and reaching him, and live by following those ways.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனின் திருவடிகளையே பற்றிக்கொண்டு, உலகத்தில் உண்மையையே பேசி, குற்றமும் குறையும் கூறாமல்
Holding fast only to God's holy feet, speaking only the truth in this world, without finding fault or blame,
- வரி 2Line 2
அறநெறியிலேயே நடப்பதோடு,
walking always the path of dharma,
- வரி 3Line 3
நம்மால் இயன்றதை வேண்டுகின்றவர்களுக்கு மனமுவந்து கொடுப்பதும் ஆகிய இவையே
and willingly giving what we can to those who ask it of us, these are
- வரி 4Line 4
முக்தி பெற்று இறைவனை அடைவதற்கு இறைவனே வகுத்த வழிகள் என்பதை அறிந்து, அந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாழுங்கள்.
the ways God himself has laid down for reaching liberation and reaching him, and know this and live by following those ways.
திருமந்திரம் பாடல் #259





