திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 258

முதல் தந்திரம்16. அறஞ்செய்வான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணிஇளைப்பினை நீக்கும் இருவழி உண்டுகிளைக்கும் தனக்கும்அக் கேடில் புகழோன்விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே.

உரை

வினையின் பயனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவி ஒரு பெரும் கடலைப் போன்றது; இந்த வினை அவ்வளவு விரைவில் தீர்ந்துவிடாது. இந்த வினையாகிய பிறவிக்கடலைக் கடந்து இறைவனை அடையும்வரை சோர்வடையாதிருக்க இரண்டு வழிகள் உண்டு; அறவழியும் தவவழியும்தான் அவை. அறத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் அவரைப் பின்பற்றுவோர்க்கும், பிறவியில்லாத மேன்மையான முக்திக்கு வழிகாட்டித் துணையாய் இருப்பான் குற்றமற்ற புகழுடைய இறைவன்.

வரி வாரியாக

  • வரி 1

    வினையின் பயனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவி ஒரு பெரும் கடலைப் போன்றது;

  • வரி 2

    இந்த வினை அவ்வளவு விரைவில் தீர்ந்துவிடாது. இந்த வினையாகிய பிறவிக்கடலைக் கடந்து இறைவனை அடையும்வரை சோர்வடையாதிருக்க இரண்டு வழிகள் உண்டு;

  • வரி 3

    அறவழியும் தவவழியும்தான் அவை.

  • வரி 4

    அறத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் அவரைப் பின்பற்றுவோர்க்கும், பிறவியில்லாத மேன்மையான முக்திக்கு வழிகாட்டித் துணையாய் இருப்பான் குற்றமற்ற புகழுடைய இறைவன்.

திருமந்திரம் பாடல் #258

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout