திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 257

முதல் தந்திரம்16. அறஞ்செய்வான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தான்தவம் செய்வதாம் செய்தவத் தவ்வழிமான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்காள்ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்நான்தெய்வ மென்று நமனும்வரு வானே.

உரை

முன்பிறவியில் செய்த அறத்தினாலும் தவத்தினாலும்தான் இப்பிறவியில் மனிதப் பிறவியும் கிடைத்திருக்கிறது. இந்த உண்மையை அறிவின் மூலம் உணர்ந்து, அறிவையே தெய்வமாகக் கருதி, அந்த அறிவின்படி இப்பிறவியிலும் அற வழிகளிலும் தவ வழிகளிலும் நடப்பவர்கள்தான் உண்மையான மனிதர்கள். உடலையே தெய்வமாகக் கருதி, ஆசைகளுக்கு அடிமையாகி, தருமவழியில் செல்லாமல் வாழும் எல்லா உயிர்களுக்கும், 'நானே தெய்வம்' என்று சொல்லி எமதர்மன்தான் உயிரை எடுக்க வருவான்; இறைவன் வரமாட்டான்.

வரி வாரியாக

  • வரி 1

    முன்பிறவியில் செய்த அறத்தினாலும் தவத்தினாலும்தான் இப்பிறவியில் மனிதப் பிறவியும் கிடைத்திருக்கிறது.

  • வரி 2

    இந்த உண்மையை அறிவின் மூலம் உணர்ந்து, அறிவையே தெய்வமாகக் கருதி, அந்த அறிவின்படி இப்பிறவியிலும் அற வழிகளிலும் தவ வழிகளிலும் நடப்பவர்கள்தான் உண்மையான மனிதர்கள்.

  • வரி 3

    உடலையே தெய்வமாகக் கருதி, ஆசைகளுக்கு அடிமையாகி, தருமவழியில் செல்லாமல் வாழும் எல்லா உயிர்களுக்கு,

  • வரி 4

    'நானே தெய்வம்' என்று சொல்லி எமதர்மன்தான் உயிரை எடுக்க வருவான்; இறைவன் வரமாட்டான்.

திருமந்திரம் பாடல் #257

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout