தொடர்ந்து படிக்கread this section continuously
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லைஇறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லைமறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்அறந்தான் அறியும் அளவறி யாரே.
உரைmeaning
உலகப் பற்றுக்களைத் துறந்த ஞானியர் செல்லும் வழியில் அவர்களுக்குச் சுற்றமும் உறவும் என்று யாரும் இருப்பதில்லை. அறம் அறிந்த ஞானியருக்கே அறத்தின் அளவு தெரியாது. அறம் செய்யாமல் வாழ்ந்தவன் இறந்து செல்லும் வழியில் எந்த இன்பமும் அவனுக்குக் கிடையாது. அறத்தை மறந்து வாழ்ந்தவன் இறந்து செல்லும் வழியில் துணையாக சிவபெருமான் வரமாட்டான்.
உலகப் பற்றுக்களைத் துறந்து அறத்தை அறிந்த ஞானியருக்கே அறத்தின் அளவு தெரியவில்லை என்றால், அறம் என்பது எவ்வளவு பெரிதாக இருக்கும்? அந்த அறத்தை அறிந்து வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தால் இறைவனே துணையாக வருவான் என்றால், அறம் எத்துணை உயர்ந்தது என்பதை எண்ணி, அறத்தின் வழியே நடந்து செல்லுங்கள்.
On the path taken by jnanis who have renounced worldly attachments, they have no kin or relatives at all with them. Even jnanis who know dharma do not know the full measure of dharma. One who lived without doing dharma finds no happiness at all on the path he takes after death. One who lived forgetting dharma will not have Sivaperuman come as his companion on the path after death.
If even jnanis, who have renounced worldly attachments and know dharma, do not know the measure of dharma, how great must dharma be? And if practicing that dharma throughout one's life brings God himself as one's companion, then consider how exalted dharma is, and walk the path of dharma.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகப் பற்றுக்களைத் துறந்த ஞானியர் செல்லும் வழியில் அவர்களுக்குச் சுற்றமும் உறவும் என்று யாரும் இருப்பதில்லை.
On the path taken by jnanis who have renounced worldly attachments, they have no kin or relatives at all with them.
- வரி 2Line 2
அறம் செய்யாமல் வாழ்ந்தவன் இறந்து செல்லும் வழியில் எந்த இன்பமும் அவனுக்குக் கிடையாது.
One who lived without doing dharma finds no happiness at all on the path he takes after death.
- வரி 3Line 3
அறத்தை மறந்து வாழ்ந்தவன் இறந்து செல்லும் வழியில் துணையாக சிவபெருமான் வரமாட்டான்.
One who lived forgetting dharma will not have Sivaperuman come as his companion on the path after death.
- வரி 4Line 4
அறம் அறிந்த ஞானியருக்கே அறத்தின் அளவு தெரியாது.
Even jnanis who know dharma do not know the full measure of dharma.
திருமந்திரம் பாடல் #256





