திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 255

முதல் தந்திரம்16. அறஞ்செய்வான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்னை அறியாது தான்நல்லன் என்னாதிங்கின்மை யறியா திளையரென் றோராதுவன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்தன்மையுடன் நல்ல தவஞ்செய்யும் நீரே.

உரை

எல்லாம் வல்ல எமன் உயிரை உடலிலிருந்து பிரிக்க வரும்போது, தன்னை யாரும் அறியாதிருக்க, அந்த உயிர் நன்மை செய்ததா தீமை செய்ததா என்று எண்ணாமல், அந்த உயிர் நீங்கினால் அதைச் சார்ந்தவர்கள் என்ன ஆவார்கள் என்று பார்க்காமல், அது இளையவரா முதியவரா என்று ஆராயாமல் உயிரை எடுத்துச் சென்றுவிடுவான். ஆகவே, எல்லாம் வல்ல அந்த எமன் வருவதற்கு முன்பே, உயிர் உடலில் நிலைத்திருக்கும்போதே, இறைவனை அடையக்கூடிய நல்ல தருமம் நிறைந்த தவங்களை நீங்கள் செய்துகொள்ளுங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    எல்லாம் வல்ல எமன் உயிரை உடலிலிருந்து பிரிக்க வரும்போது, தன்னை யாரும் அறியாதிருக்க, அந்த உயிர் நன்மை செய்ததா தீமை செய்ததா என்று எண்ணாமல்,

  • வரி 2

    அந்த உயிர் நீங்கினால் அதைச் சார்ந்தவர்கள் என்ன ஆவார்கள் என்று பார்க்காமல், அது இளையவரா முதியவரா என்று ஆராயாமல்

  • வரி 3

    உயிரை எடுத்துச் சென்றுவிடுவான். ஆகவே, எல்லாம் வல்ல அந்த எமன் வருவதற்கு முன்பே,

  • வரி 4

    உயிர் உடலில் நிலைத்திருக்கும்போதே, இறைவனை அடையக்கூடிய நல்ல தருமம் நிறைந்த தவங்களை நீங்கள் செய்துகொள்ளுங்கள்.

திருமந்திரம் பாடல் #255

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout