தொடர்ந்து படிக்கread this section continuously
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலையாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறையாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடியாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.
உரைmeaning
நாள்தோறும் இறைவனை வழிபட்டு, அவனுக்குப் படைக்க அன்போடு ஒரு பச்சை இலையையாவது வைத்தல்; நாள்தோறும் பசுவின் பசியாற்ற ஒரு கைப்பிடி புல்லைக் கொடுத்தல்; நாள்தோறும் உண்ணும்போது ஒரு கைப்பிடி உணவைத் தானமாக அளித்துவிட்டு உண்ணுதல்; நாள்தோறும் தாம் சந்திப்பவர்களிடம் அன்புடன் இனிமையாகப் பேசுதல் -- இவை அனைவராலும் எளிதாகச் செய்யக்கூடிய தருமங்கள் ஆகும்.
Placing daily, out of love, even a single green leaf as an offering to God when worshipping him; giving daily a handful of grass to feed a cow; giving away, daily, a handful of one's own food as alms before eating; speaking daily, with love, kind words to those one meets: these are acts of virtue that anyone can easily perform.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
நாள்தோறும் இறைவனை வழிபட்டு, அவனுக்குப் படைக்க அன்போடு ஒரு பச்சை இலையையாவது வைத்தல்.
Placing daily, out of love, even a single green leaf as an offering to God when worshipping him.
- வரி 2Line 2
நாள்தோறும் பசுவின் பசியாற்ற ஒரு கைப்பிடி புல்லைக் கொடுத்தல்.
Giving daily a handful of grass to feed a cow.
- வரி 3Line 3
நாள்தோறும் உண்ணும்போது ஒரு கைப்பிடி உணவைத் தானமாக அளித்துவிட்டு உண்ணுதல்.
Giving away, daily, a handful of one's own food as alms before eating.
- வரி 4Line 4
நாள்தோறும் தாம் சந்திப்பவர்களிடம் அன்புடன் இனிமையாகப் பேசுதல் -- இவை அனைவராலும் எளிதாகச் செய்யக்கூடிய தருமங்கள் ஆகும்.
Speaking daily, with love, kind words to those one meets: these are acts of virtue that anyone can easily perform.
திருமந்திரம் பாடல் #252





