தொடர்ந்து படிக்கread this section continuously
வரையிடை நின்றிழி வான்நீர் அருவிஉரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்கரையில்லை எந்தை கழுமணி யாறே.
உரைmeaning
வானத்திலிருந்து பொழிந்து மலைமுகடுகள் வழியாக அருவியாகச் சொரியும் மழைநீரில் நுரையோ அழுக்கோ இராது; அது தூய்மையான தெளிந்த நீராகவே இருக்கும். அத்தகைய நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் இறைவன் அதைச் சிறப்பாக ஏற்றுக்கொள்வான். அதேபோல், சொல்லில் அடங்காமல் உயிர்களின் உள்ளத்திலிருந்தே ஊறும் எல்லையில்லாத தூய அன்பினால், உள்ளத்தில் உறையும் இறைவனுக்குச் செய்யும் அபிஷேகத்தையும் இறைவன் சிறப்பாக ஏற்றுக்கொள்வான்.
The rainwater that pours down from the sky and cascades as a waterfall over mountain peaks carries no foam and no dirt; it is only pure, clear water. If that water is offered as abhisheka to God, God accepts it with special favour. In the same way, God accepts with special favour the abhisheka offered to the God who dwells within the heart, made not with words but with the boundless, pure love that wells up from within the hearts of living beings.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
வானத்திலிருந்து பொழிந்து மலைமுகடுகள் வழியாக அருவியாகச் சொரியும் மழைநீரில் நுரையோ அழுக்கோ இராது;
The rainwater that pours down from the sky and cascades as a waterfall over mountain peaks carries no foam and no dirt;
- வரி 2Line 2
அது தூய்மையான தெளிந்த நீராகவே இருக்கும். அத்தகைய நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் இறைவன் அதைச் சிறப்பாக ஏற்றுக்கொள்வான்.
it is only pure, clear water. If that water is offered as abhisheka to God, God accepts it with special favour.
- வரி 3Line 3
அதேபோல், சொல்லில் அடங்காமல் உயிர்களின் உள்ளத்திலிருந்தே ஊறும் எல்லையில்லாத தூய அன்பினால்,
In the same way, with the boundless, pure love that wells up from within the hearts of living beings, not with words,
- வரி 4Line 4
உள்ளத்தில் உறையும் இறைவனுக்குச் செய்யும் அபிஷேகத்தையும் இறைவன் சிறப்பாக ஏற்றுக்கொள்வான்.
God accepts with special favour the abhisheka offered, with that love, to the God who dwells within the heart.
திருமந்திரம் பாடல் #249





