திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 186

முதல் தந்திரம்4. இளமை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

எய்திய நாளில் இளமை கழியாமைஎய்திய நாளில் இசையினால் ஏத்துமின்எய்திய நாளில் எறிவ தறியாமல்எய்திய நாளில் இருந்ததுகண் டேனே.

உரை

உயிர்கள் தம் வினைப்பயனாக இவ்வுலகில் பிறக்கும்போதே, ஒரு நாளில் எத்தனை முறை மூச்சு விடுகின்றன என்கிற கணக்கின்படி எத்தனை நாள் வாழவேண்டும் என்று வரையறுக்கப்பட்டே பிறக்கின்றன. இந்த வரையறுக்கப்பட்ட நாட்களில் இளமையாக இருக்கும் நாட்களோ மிகச் சிறிதே. இளமை இருக்கும்போதே எப்போதும் நிரந்தரமான இறைவனைப் பாடித் தொழுது வாழ்வதே சிறந்தது. ஆனால் இளமை இருக்கும் நாட்களிலேயே இறைவனைப்பற்றிய எண்ணங்கள் வரவிடாமல் தடுக்கும் பலவித ஆசைகளை எடுத்து வெளியே எறிந்துவிடத் தெரியாமல், உயிர்கள் ஆசைக்கு அடிமையாகித் தங்கள் வாழ்க்கையை இழந்து, பின்பு வயதாகி இறந்துபோகின்றன. ஆசைக்கு அடிமையாகாமல், உயிரோடு இருக்கும் காலங்களிலேயே இறைவனைப்பற்றிய சிந்தனையில் வாழ்ந்த உயிர்கள் இறைவனை அடைவதை நானும் இருந்து கண்டேன்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் தம் வினைப்பயனாக இவ்வுலகில் பிறக்கும்போதே, ஒரு நாளில் எத்தனை முறை மூச்சு விடுகின்றன என்கிற கணக்கின்படி எத்தனை நாள் வாழவேண்டும் என்று வரையறுக்கப்பட்டே பிறக்கின்றன.

  • வரி 2

    இந்த வரையறுக்கப்பட்ட நாட்களில் இளமையாக இருக்கும் நாட்களோ மிகச் சிறிதே. இளமை இருக்கும்போதே எப்போதும் நிரந்தரமான இறைவனைப் பாடித் தொழுது வாழ்வதே சிறந்தது.

  • வரி 3

    ஆனால் இளமை இருக்கும் நாட்களிலேயே இறைவனைப்பற்றிய எண்ணங்கள் வரவிடாமல் தடுக்கும் பலவித ஆசைகளை எடுத்து வெளியே எறிந்துவிடத் தெரியாமல்,

  • வரி 4

    உயிர்கள் ஆசைக்கு அடிமையாகித் தங்கள் வாழ்க்கையை இழந்து, பின்பு வயதாகி இறந்துபோகின்றன. ஆசைக்கு அடிமையாகாமல், உயிரோடு இருக்கும் காலங்களிலேயே இறைவனைப்பற்றிய சிந்தனையில் வாழ்ந்த உயிர்கள் இறைவனை அடைவதை நானும் இருந்து கண்டேன்.

திருமந்திரம் பாடல் #186

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout