திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 184

முதல் தந்திரம்4. இளமை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினைஉண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்விண்ணுறு வாரையும் மண்ணுறு வாரையும்எண்ணுறு முப்பதில் ஈர்ந்துஒழிந் தாரே.

உரை

உயிரின் கண்களில் பார்வையாய் இருப்பவனும், பார்க்கப்படும் பொருளாய் இருப்பவனும் இறைவனே. ஆனால் உயிர்கள் பார்க்கப்படும் பொருளின்மேல் மாயையால் ஆசைப்பட்டு உலக இன்பங்களில் ஈடுபட்டு வினைகளைச் சேர்ப்பதை, அந்த உயிரின் உள்ளிருந்தே இறைவன் அளந்துகொண்டிருப்பதை யாரும் உணரவில்லை. இறைவனை அடையும் வழிகளைத் தேடி, அதன் பயனாக விண்ணுலகில் இறைவனை அடைவதும், ஆசைகளுக்கு வயப்பட்டு அவற்றை அனுபவித்து அதன் பயனாகப் பல வினைகளைச் சேர்த்துக்கொண்டு அவற்றைத் தீர்க்க மீண்டும் மீண்டும் மண்ணுலகில் பிறப்பதும், உயிர்களின் எண்ணத்தின்படி, உடலின் இளமை நிலைத்திருக்கும் முப்பது ஆண்டுகளில் உயிர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகளிலேயே இருக்கிறது.

வரி வாரியாக

  • வரி 1

    உயிரின் கண்களில் பார்வையாய் இருப்பவனும், பார்க்கப்படும் பொருளாய் இருப்பவனும் இறைவனே.

  • வரி 2

    ஆனால் உயிர்கள் பார்க்கப்படும் பொருளின்மேல் மாயையால் ஆசைப்பட்டு உலக இன்பங்களில் ஈடுபட்டு வினைகளைச் சேர்ப்பதை, அந்த உயிரின் உள்ளிருந்தே இறைவன் அளந்துகொண்டிருப்பதை யாரும் உணரவில்லை.

  • வரி 3

    இறைவனை அடையும் வழிகளைத் தேடி, அதன் பயனாக விண்ணுலகில் இறைவனை அடைவதும், ஆசைகளுக்கு வயப்பட்டு அவற்றை அனுபவித்து அதன் பயனாகப் பல வினைகளைச் சேர்த்துக்கொண்டு அவற்றைத் தீர்க்க மீண்டும் மீண்டும் மண்ணுலகில் பிறப்பதும்,

  • வரி 4

    உயிர்களின் எண்ணத்தின்படி, உடலின் இளமை நிலைத்திருக்கும் முப்பது ஆண்டுகளில் உயிர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகளிலேயே இருக்கிறது.

திருமந்திரம் பாடல் #184

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout