திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 179

முதல் தந்திரம்4. இளமை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறைஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியைஓர்ந்துஉற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.

உரை

உயிர்கள் பிறந்து வளர வளர உடலும் தேய்ந்து, இளமை மாறி முதுமை வந்து, ஒரு நாள் இறந்தும் போகின்ற இயற்கையின் விதியை ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள். அவ்வாறு அறிந்துகொண்டபின், பாய்ந்துவரும் கங்கையைத் தன் திருமுடியில் சூடிக்கொண்டிருக்கும் இறைவனே என்றும் நிரந்தரமானவன் என்பதை உணர்ந்து, அவனைச் சென்றடையத் தேவையான பல அரிய தவங்களையும் தியானங்களையும் குருநாதர் வழியாகக் கற்றுக்கொண்டு, மனத்தை ஒருமுகப்படுத்தி, அந்த அரிய செயல்களை உயிர் உடலில் இருக்கும்போதே செய்து இறைவனைச் சென்றடையுங்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் பிறந்து வளர வளர உடலும் தேய்ந்து, இளமை மாறி முதுமை வந்து, ஒரு நாள் இறந்தும் போகின்ற இயற்கையின் விதியை ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள்.

  • வரி 2

    அவ்வாறு அறிந்துகொண்டபின், பாய்ந்துவரும் கங்கையைத் தன் திருமுடியில் சூடிக்கொண்டிருக்கும் இறைவனே என்றும் நிரந்தரமானவன் என்பதை உணர்ந்து,

  • வரி 3

    அவனைச் சென்றடையத் தேவையான பல அரிய தவங்களையும் தியானங்களையும் குருநாதர் வழியாகக் கற்றுக்கொண்டு, மனத்தை ஒருமுகப்படுத்தி,

  • வரி 4

    அந்த அரிய செயல்களை உயிர் உடலில் இருக்கும்போதே செய்து இறைவனைச் சென்றடையுங்கள்.

திருமந்திரம் பாடல் #179

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout