திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 178

முதல் தந்திரம்4. இளமை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்பூண்டு கொண்டாரும் புகுந்தறிவா ரில்லைநீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்தூண்டு விளக்கின் சுடருமறி யாரே.

உரை

உயிர்கள் பிறந்து வளர வளர உடலும் தேய்ந்து, இளமை மாறி முதுமை வந்து, ஒரு நாள் இறந்தும் போகின்ற இயற்கையின் விதியை ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள். எரிகின்ற தீபச்சுடரை எத்தனை காலம் தூண்டுகோலால் திரிநூலை நீட்டி நீட்டி எரியவைத்தாலும், திரிநூல் தீர்ந்தபின் விளக்கு அணைந்துபோகும் என்கிற உண்மையை யாரும் அறியாமல் இருக்கின்றனர். திரி போன்ற உடலின் உள்ளே தீபம் போல் இருக்கும் உயிர் பிறந்து வளர வளர, எரியும் தீபத்தின் திரிநூல் தீர்ந்துவிடுவதுபோல, உடலும் இளமை மாறி முதுமை கூடி ஒருநாள் அழிந்துபோய்விடும்.

உடல் என்றும் இளமையுடன் இருக்காது என்ற உண்மையை உணர்ந்து, உயிர் பிரிந்துபோவதற்குள் இருக்கும் காலத்திலேயே என்றும் நிலைத்திருக்கும் இறைவனைத் தமக்குள் உணர்ந்து, அவனுடன் பேரின்பத்தில் இணைந்து எப்போதும் நிலைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் பிறந்து பல ஆண்டுகள் உலகத்தில் கழித்தாலும்,

  • வரி 2

    இறைவனைப் பற்றிக்கொண்டு தம் ஆன்மாவிற்குள் அவனைப் புகுந்து உணர்ந்து அறிபவர் யாருமில்லை.

  • வரி 3

    எரிகின்ற தீபச்சுடரை எத்தனை காலம் தூண்டுகோலால் திரிநூலை நீட்டி நீட்டி எரியவைத்தாலும், திரிநூல் தீர்ந்தபின் விளக்கு அணைந்துபோகும் என்கிற உண்மையை யாரும் அறியாமல் இருக்கின்றனர்.

  • வரி 4

    திரி போன்ற உடலின் உள்ளே தீபம் போல் இருக்கும் உயிர் பிறந்து வளர வளர, எரியும் தீபத்தின் திரிநூல் தீர்ந்துவிடுவதுபோல, உடலும் இளமை மாறி முதுமை கூடி ஒருநாள் அழிந்துபோய்விடும்.

திருமந்திரம் பாடல் #178

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout