நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்பண்பாற்றார் ஆதல் கடை.
naNpARRAr Aki nayamila seyvArkkumpaNpARRAr Atal kaTai
Thirukkural
பொருள் / உரை
முருகா எளிய உரை
தம்மோடு நட்புக் கொள்ளாமல் பகைமை கொண்டு தீமைகளையே செய்கின்றவர்களிடத்திலும்கூட, தாம் நற்பண்போடு நடந்து கொள்ளாமல் தீமை செய்வது சான்றோர்களுக்கு மிகப்பெரிய இழிவாகும்.
• நண்பு ஆற்றாராகி = தம்முடன் நட்புக் கொள்ளாமல் பகைமை கொண்டு,• நயம் இல செய்வார்க்கும் = தீமைகளையும் கொடுமைகளையுமே செய்கின்றவர்களிடத்திலும் கூட,• பண்பு ஆற்றாராதல் = தாம் பண்போடு நடக்காமல் பழிக்குப் பழி வாங்குவது,• கடை = சான்றோர்களுக்கு இழிவான இழுக்காகும்.
மு.வரதராசன்
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.
பரிமேலழகர்
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுவார் மாட்டும்; பண்பு ஆற்றாராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம். (நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.)
சாலமன் பாப்பையா
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.
Meaning in English
Though men with all unfriendly acts and wrongs assail, 'Tis uttermost disgrace in 'courtesy' to fail





