Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 994

பொருட்பால்ஒழிபியல்100. பண்புடைமை

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்பண்புபா ராட்டும் உலகு.

nayanoTu nanRi purinta payanuTaiyArpaNpuLa rATTum ulaku

Vidhya Vedantham

பொருள் / உரை

முருகா எளிய உரை

நீதி வழுவாமல் அறநெறியைப் பின்பற்றி, நற்செயல்களால் உலக மக்களுக்குப் பயன்படும்படி வாழ்கின்ற பெருமக்களின் நற்பண்புகளை உலகத்தார் அனைவரும் எக்காலத்திலும் போற்றிக் கொண்டாடுவார்கள்.

• நயனொடு = நீதி தவறாத நேர்மையோடும்,• நன்றி புரிந்த = அறநெறியோடும் கூடி நன்மைகளைச் செய்து,• பயன் உடையார் = பிறர்க்கும் சமுதாயத்திற்கும் பயன்பட வாழ்கின்ற பெருமக்களின்,• பண்பு = சிறந்த நற்பண்பை,• உலகு பாராட்டும் = உலகத்தார் அனைவரும் கொண்டாடிப் போற்றுவார்கள்.

மு.வரதராசன்

நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

பரிமேலழகர்

நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடா நிற்பர். ('புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு. நயனொடு நன்றி புரிதலும் பயனுடைமையும் பண்பு காரணமாக வந்தமையின், அதனைப் 'பாராட்டும்' என்றார்.)

சாலமன் பாப்பையா

நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

Meaning in English

Of men of fruitful life, who kindly benefits dispense, The world unites to praise the 'noble excellence.'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout