Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 991

பொருட்பால்ஒழிபியல்100. பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்பண்புடைமை என்னும் வழக்கு.

eNpatattAl eytal eLitenpa yArmATTumpaNpuTaimai ennum vazhakku

Aruldev

பொருள் / உரை

முருகா எளிய உரை

எவர் ஒருவராயினும் அவரிடத்தில் எளிதாக அணுகி இன்முகத்தோடு பழகும் எளிய தன்மையோடு வாழ்ந்தால், பண்புடைமை என்கின்ற உயர்ந்த ஒழுக்க நெறியை ஒருவர் மிக எளிதாக அடைந்துவிடலாம் என்று நூலோர் கூறுவர்.

• யார் மாட்டும் = யாவரிடத்திலும் எளிதில் அணுகிப் பழகக்கூடிய,• எண்பதத்தால் = எளிய இனிய அணுகுமுறையோடு வாழ்வதால்,• பண்புடைமை என்னும் வழக்கு = பண்புடைமை என்கின்ற சிறந்த ஒழுக்க நெறியை,• எய்தல் எளிது என்ப = ஒருவர் எளிதாக அடைந்துவிடலாம் என்று சான்றோர் கூறுவர்.

மு.வரதராசன்

பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

பரிமேலழகர்

யார் மாட்டும் எண்பதத்தால் - யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர். (குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண்பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறி யாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர் மேல் வைத்தும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.

Meaning in English

Who easy access give to every man, they say, Of kindly courtesy will learn with ease the way

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout