Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 99

அறத்துப்பால்இல்லறவியல்10. இனியவைகூறல்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்கு வது.

insol initInRal kANpAn evankolOvansol vazhangku vatu

Sonu Nigam

பொருள் / உரை

முருகா எளிய உரை

பிறர் சொல்லும் இன்சொல் இன்பம் உணர்ந்தோனே!அதனை அனுபவித்தே அறிந்தோனே!பிறர்க்குத் துன்பம் மிகத் தரும் வன்சொல்லை!அதைப் பேசுவதால் பயனே இல்லையே!

• இன்சொல் = பிறர் கூறும் இனிய சொற்கள்• இனிது ஈன்றல் காண்பான் = தனக்கு இன்பம் தருவதை அனுபவித்து உணர்ந்தவன்,• வன்சொல் வழங்குவது = பிறரிடம் துன்பம் தரும் கடுஞ்சொற்களைப் பேசுவது• எவன்கொல் = என்ன காரணம் கருதியோ? (எந்தப் பயனும் தராது).

மு.வரதராசன்

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

பரிமேலழகர்

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?

Meaning in English

Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant words

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout