சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.
siRumaiyuL nIngkiya insol maRumaiyumimmaiyum inpam tarum
Dhina
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறர்க்குத் துன்பம் ஏதும் தராத சொல்லே!சிறுமை இல்லாத தூய சொல் அதுவே!இவ்வுலகிலும் பேரின்பம் தந்திடுமே!மறுமையிலும் பேரின்பம் தந்திடுமே!
• சிறுமையுள் நீங்கிய = பிறருக்குத் துன்பம் விளைவிக்காத (சிறுமைத்தனம் அற்ற)• இன்சொல் = இனிய சொல்லானது,• மறுமையும் = மறுமை வாழ்க்கையிலும்,• இம்மையும் = இந்த உலக வாழ்விலும்• இன்பம் தரும் = பேசுபவனுக்குப் பேரின்பத்தைத் தரும்.
மு.வரதராசன்
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
பரிமேலழகர்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
Meaning in English
Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart





