நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல்.
nayanInRu nanRi payakkum payanInRupaNpin talaippiriyAs sol
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
கேட்போர்க்கெலாம் பயனைத் தந்திடும் சொல்லே!நற்பண்பை விட்டு விலகாத அச்சொல்லே!இவ்வுலகில் நல்லுறவைத் தந்திடுமே!மறுமைக்கும் அறநன்மை சேர்த்திடுமே!
• பயன் ஈன்று = கேட்பவர்க்கு நற்பயனைத் தந்து,• பண்பின் தலைப்பிரியாச் சொல் = இனிய நற்பண்பிலிருந்து விலகாத சொல்லானது,• நயன் ஈன்று = இப்பிறவியில் உலகத்தாரோடு இணக்கமான நல்லுறவையும்,• நன்றி பயக்கும் = மறுமைக்கு அழியாத அறத்தின் நன்மையையும் தரும்.
மு.வரதராசன்
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
பரிமேலழகர்
நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.)
சாலமன் பாப்பையா
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
Meaning in English
The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yield in every sphere





