Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 100

அறத்துப்பால்இல்லறவியல்10. இனியவைகூறல்

இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

iniya uLavAka innAta kURalkaniiruppak kAykavarn taRRu

Blaaze

பொருள் / உரை

முருகா எளிய உரை

இன்பம் தரும் இனிய சொல் இருக்கவே!கடுஞ்சொல் பேசல் ஒரு மடமையாமே!பழுத்த சுவைக்கனி இருக்கும் போதே!காய்களைப் பறித்து உண்பது போன்றதே!

• இனிய உளவாக = இன்பம் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது,• இன்னாத கூறல் = துன்பம் தரும் கடுஞ்சொற்களைப் பேசுவதானது,• கனி இருப்ப = சுவையான பழுத்த பழங்கள் இருக்கும்போது• காய் கவர்ந்தற்று = கசப்பான காய்களைப் பறித்து உண்பது போன்ற மடமையாகும்.

மு.வரதராசன்

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .

பரிமேலழகர்

இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

Meaning in English

When pleasant words are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout