செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.
seyyAmal seyta utavikku vaiyakamumvAnakamum ARRal aritu
Santhosh Subramanian
பொருள் / உரை
முருகா எளிய உரை
நாம் முன்பு உதவியே செய்யாதிருந்தே!ஒருவர்தான் பேருதவி செய்திருந்தே!வையகமும் வானகமும் முடியாதே!அவ்வுதவிக்கு ஈடாக முடியாதே!
• செய்யாமல் = தான் முன்பு எந்த உதவியும் செய்யாதிருந்த போதும்,• செய்த உதவிக்கு = தனக்கு ஒருவர் செய்த பேருதவிக்குக் கைம்மாறாக,• வையகமும் = மண்ணுலகத்தையும்• வானகமும் = விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் கூட• ஆற்றல் அரிது = அதற்கு ஈடாக முடியாது.
மு.வரதராசன்
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
பரிமேலழகர்
செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது
Meaning in English
Assistance given by those who ne'er received our aid, Is debt by gift of heaven and earth but poorly paid





