Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 102

அறத்துப்பால்இல்லறவியல்11. செய்ந்நன்றி அறிதல்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது.

kAlatti nARseyta nanRi siRiteninumnjAlattin mANap peritu

Bharadwaj

பொருள் / உரை

முருகா எளிய உரை

தக்க நேரத்தில் செய்யும் அந்த நன்றியே!சிறிதாய் இருந்தாலும் அஃதோர் நன்றியே!இவ்வுலகத்தையும் அது மிஞ்சிடுமே!மாண்பினால் இவ்வுலகையும் மிஞ்சிடுமே!

• காலத்தினால் = தக்க நெருக்கடியான காலத்தில்• செய்த நன்றி = ஒருவர் செய்த உதவியானது,• சிறிதெனினும் = அளவில் மிகச் சிறியதாகவே இருந்தாலும்,• ஞாலத்தின் = இந்த உலகத்தை விடவும்• மாணப் பெரிது = மிகவும் பெரியதாகும்.

மு.வரதராசன்

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

பரிமேலழகர்

காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.)

சாலமன் பாப்பையா

நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்

Meaning in English

A timely benefit, -though thing of little worth, The gift itself, -in excellence transcends the earth

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout