பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.
payantUkkAr seyta utavi nayantUkkinnanmai kaTalin peritu
Yogeshwaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• பயன்தூக்கார் = 'நமக்கு என்ன கிடைக்கும்' என்று பலனை ஆராயாமல்• செய்த உதவி = ஒருவர் செய்த பேருதவியின்• நயன் தூக்கின் = அன்புடைமையை ஆராய்ந்து பார்த்தால்,• நன்மை = அதனால் உண்டான நன்மையானது• கடலின் பெரிது = பரந்த பெருங்கடலை விடவும் மிகப் பெரியதாகும்.எளிய விளக்கம்:பலனை எண்ணாமல் செய்யும் உதவியே!அன்புடைமை ஆராயும் அவ்வுதவியே!அதனால் உண்டாகும் நன்மையோ பெரிதே!பரந்த பெருங்கடலினும் பெரிதே!
மு.வரதராசன்
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
பரிமேலழகர்
பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
Meaning in English
Kindness shown by those who weigh not what the return may be: When you ponder right its merit, 'Tis vaster than the sea





