Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 104

அறத்துப்பால்இல்லறவியல்11. செய்ந்நன்றி அறிதல்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.

tinaittuNai nanRi seyinum panaittuNaiyAkkoLvar payanteri vAr

Gomahal Sindhu

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• தினைத்துணை = தினை தானிய அளவு மிகச் சிறிய• நன்றி செயினும் = உதவியைச் செய்திருந்தாலும்,• பயன் தெரிவார் = அந்த உதவியின் பயனை அறிந்தவர்கள்,• பனைத்துணையாக் கொள்வர் = அதனைப் பனைமரம் போல மிகப் பெரியதாகக் கருதிப் போற்றுவர்.எளிய விளக்கம்:ஒருவர் செய்த உதவி தினை அளவு மிகச் சிறியதாக இருந்தாலும், அந்த உதவியால் பயன்பெற்ற நன்றியுள்ள சான்றோர்கள், அதனைப் பனை மரத்தைப் போல மிகப் பெரிய உதவியாகக் கருதி வாழ்நாள் முழுவதும் போற்றுவார்கள்.

மு.வரதராசன்

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

பரிமேலழகர்

தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.)

சாலமன் பாப்பையா

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்

Meaning in English

Each benefit to those of actions' fruit who rightly deem, Though small as millet-seed, as palm-tree vast will seem

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout