Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 105

அறத்துப்பால்இல்லறவியல்11. செய்ந்நன்றி அறிதல்

உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.

utavi varaittan Rutavi utaviseyappaTTAr sAlpin varaittu

Lakshana

பொருள் / உரை

முருகா எளிய உரை

உதவியின் பெருமை அளவால் அன்றே!உதவியின் அளவே அதற்கு அன்றே!அது பெற்றவரின் நற்பண்பைப் பொறுத்தே!பெற்றவரின் சால்பின் அளவேயாகுமே!

• உதவி வரைத்தன்று = ஒரு உதவியின் அளவானது அந்த உதவியின் அளவைப் பொறுத்தது அல்ல;• உதவி செயப்பட்டார் = அந்த உதவியைப் பெற்றுக் கொண்டவருடைய• சால்பின் வரைத்து = உயர்ந்த நற்பண்பின் (சான்றாண்மையின்) அளவைப் பொறுத்ததாகும்.

மு.வரதராசன்

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

பரிமேலழகர்

உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. '(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

Meaning in English

The kindly aid's extent is of its worth no measure true; Its worth is as the worth of him to whom the act you do

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout