மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.
maRavaRka mAsaRRAr kENmai tuRavaRkatunpattuL tuppAyAr naTpu
Ruhan Ravindran
பொருள் / உரை
முருகா எளிய உரை
துன்பத்தில் நின்றவர் நட்பைக் கைவிடாதே!உற்றுதவும் நட்பை என்றும் கைவிடாதே!மாசற்றார் கேண்மையை என்றும் மறவாதே!நல்லோரின் உறவை என்றும் மறவாதே!
• துன்பத்துள் = தனக்குத் துன்பம் வந்த காலத்தில்• துப்பாயார் நட்பு = உற்ற துணையாய் நின்று உதவியவரின் நட்பை• துறவற்க = ஒருபோதும் கைவிடக்கூடாது;• மாசற்றார் = குற்றமற்ற நற்குணமுடைய சான்றோரின்• கேண்மை = உறவை• மறவற்க = எப்போதும் மறக்கக்கூடாது.
மு.வரதராசன்
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
பரிமேலழகர்
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக;மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)
சாலமன் பாப்பையா
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
Meaning in English
Kindness of men of stainless soul remember evermore Forsake thou never friends who were thy stay in sorrow sore





