ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை.
ARRuvAr ARRal paNital atusAnROrmARRArai mARRum paTai
Sujeetha Sabanayagam
பொருள் / உரை
முருகா எளிய உரை
அரிய செயல்களைச் செய்து முடிக்கும் திறமையாளர்களின் உண்மையான வலிமை பணிவோடு நடப்பதேயாகும்; அத்தகைய பணிவுப் பண்பே சான்றோர்கள் தம் பகைவர்களின் பகையை மாற்றி அவர்களை நண்பர்களாக மாற்றுகின்ற சிறந்த ஆயுதமாகவும் திகழ்கிறது.
• ஆற்றுவார் ஆற்றல் = அரிய காரியங்களைச் செய்து முடிக்கும் ஆற்றலாளரின் உண்மையான வலிமையாவது,• பணிதல் = பிறரிடம் பணிவோடு அடங்கி நடப்பதேயாகும்;• அது சான்றோர் = அந்தப் பணிவுப் பண்பே சான்றோர்கள்,• மாற்றாரை மாற்றும் படை = தம் பகைவரின் பகைமையை ஒழித்து அவரை நண்பராக்கும் சிறந்த ஆயுதமுமாகும்.
Murugaa simple commentary
The true strength of skilled persons who accomplish rare deeds is behaving with humility; such a quality of humility also stands as the finest weapon by which noble persons transform the enmity of their enemies and turn them into friends.
• The power of those who accomplish = The true strength of capable persons who accomplish rare tasks is,• Humility = behaving with humility and modesty towards others;• That is, for the noble = that very quality of humility is, for noble persons,• The weapon that transforms foes = also the finest weapon that eliminates the enmity of their enemies and turns them into friends.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
பரிமேலழகர்
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே.(ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய எச்சஉம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன்கூறினார்.)
Parimelazhagar
The strength of those who accomplish is humility, the strength of those who carry out and complete an action is to bow down and gather to oneself those who will assist in it; that is the weapon by which the noble change their foes, furthermore, that very thing is also the instrument by which those of excellence rid their enemies of enmity. ('Strength' is the quality of being capable of that. The conjunctive particle 'um' embracing what preceded was elided by poetic modification. In stating the excellence of the quality of humility suited to nobility, he stated the other alongside it as well.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.
Meaning in English
Submission is the might of men of mighty acts; the sage With that same weapon stills his foeman's rage

