கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு.
kollA nalattatu nOnmai piRartImaisollA nalattatu sAlpu
Gobi Sudha 🌞🌝
பொருள் / உரை
முருகா எளிய உரை
எந்த ஓர் உயிரையும் கொல்லாமல் காக்கும் அறமே தவத்திற்கு முதன்மையான அழகாகும்; அதுபோலவே மற்றவர்கள் செய்யும் குற்றங்களையும் குறைகளையும் ஊரறியப் பேசாமல் காப்பதே சான்றாண்மைக்குப் பெருமை தரும் சிறந்த அழகாகும்.
• நோன்மை = தவம் என்பது,• கொல்லா நலத்தது = எந்த ஒரு உயிரையும் கொல்லாத அறப்பண்பை அடிப்படையாகக் கொண்டதாகும்;• சால்பு = அதுபோலவே சான்றாண்மை என்பது,• பிறர் தீமை சொல்லா நலத்தது = பிறர் செய்த குற்றங்களையும் குறைகளையும் எடுத்துப் பேசாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டதாகும்.
மு.வரதராசன்
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
பரிமேலழகர்
நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம். (நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.)
சாலமன் பாப்பையா
பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.
Meaning in English
The type of 'penitence' is virtuous good that nothing slays; To speak no ill of other men is perfect virtue's praise





