Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 982

பொருட்பால்ஒழிபியல்99. சான்றாண்மை

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

kuNanalanj sAnROr nalanE piRanalamennalat tuLLatUu manRu

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

சான்றோர்களுக்கு உண்மையான அழகும் மேன்மையும் தருவது அவர்தம் நற்குணங்கள் மட்டுமேயாகும்; உடலமைப்பாலும் செல்வத்தாலும் கிடைக்கின்ற மற்ற புற அழகுகள் எதுவும் ஒருபோதும் உண்மையான அழகாகக் கருதப்படாது.

• சான்றோர் நலனே = சான்றோர்களுக்குரிய உண்மையான அழகும் பெருமையும்,• குணநலம் = அவர்தம் நற்குணங்களால் உண்டாகும் அக அழகே ஆகும்;• பிறநலம் = உடலமைப்பு மற்றும் செல்வம் முதலிய பிற புற அழகுகள்,• எந்நலத்து உள்ளதூஉம் அன்று = எந்த ஒரு சிறந்த அழகிலும் சேர்க்கப்படக் கூடியது அன்று.

மு.வரதராசன்

சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.

பரிமேலழகர்

சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று. (அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப் பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின்,எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவைஇரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள்பொதுவகையான் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.

Meaning in English

The good of inward excellence they claim, The perfect men; all other good is only good in name

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout