அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும்.
aRRam maRaikkum perumai siRumaitAnkuRRamE kURi viTum
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
பெருமைக்குரிய சான்றோர்கள் பிறருடைய குறைகளையும் அவமானங்களையும் மறைத்து அவர்களது நற்குணங்களை மட்டுமே போற்றுவார்கள்; ஆனால் சிறுமைக் குணம் கொண்டவர்களோ பிறரின் நன்மைகளை மறைத்துக் குறைகளையே பெரிதுபடுத்திப் பேசுவார்கள்.
• பெருமை = பெருமைப் பண்புடைய சான்றோர்கள்,• அற்றம் மறைக்கும் = பிறரிடத்தில் காணப்படும் குறைகளையும் அவமானங்களையும் மறைத்து அவர்தம் நற்குணங்களைப் போற்றுவர்;• சிறுமைதான் = ஆனால் சிறுமைக் குணம் உடையவர்களோ,• குற்றமே கூறிவிடும் = பிறரின் நற்பண்புகளை மறைத்து அவர்தம் குறைகளையும் தவறுகளையுமே ஊரறியப் பேசித் திரிவர்.
மு.வரதராசன்
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்
பரிமேலழகர்
பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார். (மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகுபெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா
பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.
Meaning in English
Greatness will hide a neighbour's shame; Meanness his faults to all the world proclaim





