Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 979

பொருட்பால்ஒழிபியல்98. பெருமை

பெருமை பெருமிதம் இன்மை சிறுமைபெருமிதம் ஊர்ந்து விடல்.

perumai perumitam inmai siRumaiperumitam Urntu viTal

Kurale Kavithaiyai

பொருள் / உரை

முருகா எளிய உரை

பெருமைப்பட்டுக்கொள்ள பல சிறப்புக் காரணங்கள் இருந்தாலும் ஆணவமும் தற்பெருமையும் இல்லாமல் அடக்கமாக இருப்பதே பெருமை; எந்தத் தகுதியும் இல்லாமல் எல்லையற்ற ஆணவத்தில் மிதப்பதே சிறுமையாகும்.

• பெருமை = பெருமைக்குணமாவது தமக்கு எத்துணைப் பெருமைகள் இருந்தாலும்,• பெருமிதம் இன்மை = ஆணவமும் செருக்கும் இல்லாதிருத்தலாகும்;• சிறுமை = சிறுமைக் குணமாவது தகுதியற்ற நிலையிலும்,• பெருமிதம் ஊர்ந்துவிடல் = எல்லையற்ற ஆணவத்தின் உச்சியிலே ஏறி நின்று அழிவதாகும்.

மு.வரதராசன்

பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

பரிமேலழகர்

பெருமை பெருமிதம் இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக்கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல். ('அளவறத் தருக்குதல்' என்பதாயிற்று. 'விடும்' என்று பாடம் ஓதுவாரும் உளர், முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.)

சாலமன் பாப்பையா

பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.

Meaning in English

Greatness is absence of conceit; meanness, we deem, Riding on car of vanity supreme

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout