Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 978

பொருட்பால்ஒழிபியல்98. பெருமை

பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து.

paNiyumAm enRum perumai siRumaiaNiyumAm tannai viyantu

M. S. Shanmugam

பொருள் / உரை

முருகா எளிய உரை

உண்மையான பெருமை உடையவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையிலும் தலைக்கனம் இல்லாமல் பணிவோடு நடப்பார்கள்; ஆனால் சிறுமைக் குணம் கொண்டவர்களோ தம்மைத் தாமே பெரிதாகப் புகழ்ந்து கொண்டு இறுமாப்பு அடைவார்கள்.

• பெருமை = பெருமைக்குரிய உயர்ந்த சான்றோர்கள்,• என்றும் பணியும் = எக்காலத்திலும் செருக்கின்றி எல்லோரிடமும் பணிவோடு அடங்கி நடப்பார்கள்;• சிறுமை = ஆனால் சிறுமைக் குணம் உடையவர்களோ,• தன்னை வியந்து அணியும் = தம்மைத் தாமே வியந்து பாராட்டிப் பெருமை பேசிக் கொள்வார்கள்.

மு.வரதராசன்

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

பரிமேலழகர்

பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர். (பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை'(குறள் 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. ஆம் என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக்கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.

Meaning in English

Greatness humbly bends, but littleness always Spreads out its plumes, and loads itself with praise

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout