Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 977

பொருட்பால்ஒழிபியல்98. பெருமை

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்சீரல் லவர்கண் படின்.

iRappE purinta tozhiRRAm siRapputAnsIral lavarkaN paTin

K. R. Vasanthakumari

பொருள் / உரை

முருகா எளிய உரை

செல்வம், கல்வி, அதிகாரம் போன்ற சிறப்புகள் அதற்குத் தகுதியில்லாத சிறுமைக் குணம் கொண்டவர்களிடம் சேருமானால், அது அவரிடத்தில் வரம்பு மீறிய தலைக்கனத்தையும் செருக்கு மிக்க இழிசெயல்களையுமே உருவாக்கும்.

• சிறப்புந்தான் = பெருமைக்குரிய செல்வமும் பதவியும் ஆகிய சிறப்புகள்,• சீரல்லவர்கண்படின் = அதற்குப் பொருந்தாத சிறுமைக் குணம் கொண்ட கீழ் மக்களிடம் சேருமானால்,• இறப்பே புரிந்த தொழிற்றாம் = அது வரம்பு மீறிய ஆணவமும் கொடுமையும் கொண்ட செயல்களையே விளைவிக்கும்.

மு.வரதராசன்

சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.

பரிமேலழகர்

சிறப்பும் தான் - தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர் அல்லவர்கண்படின் - தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின்; இறப்பே புரிந்த தொழிற்றாம் - அதனை ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம்.(தருக்கினை மிகச்செய்யும் என்பதாயிற்று. சிறப்பு - குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.

Meaning in English

Whene'er distinction lights on some unworthy head, Then deeds of haughty insolence are bred

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout