பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.
perumai yuTaiyavar ARRuvAr ARRinarumai yuTaiya seyal
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
உண்மையான பெருமை குணம் கொண்டவர்கள், எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும் பிறரால் செய்ய முடியாத அரிய பெரிய காரியங்களை அதற்குரிய முறையான நல்வழிகளில் நின்று செய்து முடிக்கும் வல்லமை உடையவர்கள் ஆவர்.
• பெருமையுடையவர் = உண்மையான பெருமைப் பண்பு கொண்ட சான்றோர்கள்,• அருமையுடைய செயல் = மற்றவர்களால் செய்ய முடியாத அரிய நற்செயல்களை,• ஆற்றின் = உரிய நல்வழிகளில் நின்று,• ஆற்றுவார் = முறையாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.
மு.வரதராசன்
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
பரிமேலழகர்
பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர். ('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை உடையவர்' என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
Meaning in English
The man endowed with greatness true, Rare deeds in perfect wise will do





