பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்.
piRappokkum ellA uyirkkum siRappovvAseytozhil vERRumai yAn
Pooja AV
பொருள் / உரை
முருகா எளிய உரை
உலகில் பிறக்கும் எல்லா மனிதர்களுக்கும் பிறப்பியல்பு சமமான ஒன்றேயாகும்; ஆனால் அவரவர் செய்யும் செயல்களின் நன்மை, தீமை மற்றும் சிறப்புகளின் வேறுபாடுகளால் மட்டுமே அவர்களது பெருமையும் உயர்வும் தீர்மானிக்கப்படுகின்றன.
• எல்லா உயிர்க்கும் = உலகில் பிறக்கும் எல்லா மனிதர்களுக்கும்,• பிறப்பு ஒக்கும் = பிறப்பு என்னும் இயற்கை நிலை ஒன்று போன்ற சமமானதேயாகும்;• செய்தொழில் வேற்றுமையான் = ஆயினும் அவரவர் செய்யும் நற்செயல்கள் மற்றும் தீய செயல்களின் வேறுபாட்டால்,• சிறப்பு ஒவ்வா = அவர்தம் பெருமைக்குரிய சிறப்புத் தகுதிகள் ஒத்திருப்பதில்லை.
Murugaa simple commentary
For all human beings born in the world, the nature of birth is one and the same equal thing; but only by the differences in the good, evil, and merits of the deeds performed by each person are their glory and eminence determined.
• To all living beings = To all human beings born in the world,• Birth is equal = The natural state called birth is equal and alike;• Due to differences in deeds performed = However, due to the difference in the good deeds and evil deeds performed by each person,• Distinction is not alike = Their praiseworthy special merits are not alike.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
பரிமேலழகர்
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.)
Parimelazhagar
Birth is equal for all living beings, although the nature of birth that is common to all human beings is equal; distinctions are not equal because of the difference in the deeds performed, the distinguishing qualities called greatness and smallness are not equal because of the difference in the deeds they perform. (Difference, the measured classifications of those that are good, those that are bad, those that are both, and those that are neither. Because taking on a body that is the evolution of the five elements due to the force of karma and experiencing its fruits is equal for people of all varnas, he said 'birth is equal', and because the classifications of deeds, which are the touchstone for greatness and smallness, differ for every varna and every body, he said 'distinctions are not equal'.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
Meaning in English
All men that live are one in circumstances of birth; Diversities of works give each his special worth

