Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 971

பொருட்பால்ஒழிபியல்98. பெருமை

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்குஅஃதிறந்து வாழ்தும் எனல்.

oLiyoruvaR kuLLa veRukkai iLiyoruvaRkaஃtiRantu vAzhtum enal

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு மனிதனுக்குப் பெருமையும் வாழ்வின் ஒளியும் தருவது பிறர் செய்ய முடியாத அரிய நற்செயல்களைச் செய்வோம் என்ற மன ஊக்கமேயாகும்; அத்தகைய உயர்ந்த ஊக்கம் இல்லாமல் வெறும் உடம்பைக் காத்து வாழ்வோம் என்று எண்ணுவது இழிவாகும்.

• ஒருவற்கு ஒளி = ஒரு மனிதனுக்குப் பெருமையும் ஒளியும் தருவது,• உள்ள வெறுக்கை = பிறரால் செய்ய முடியாத அரிய நற்செயல்களைச் செய்து முடிப்போம் என்னும் ஊக்க மிகுதியாகும்;• ஒருவற்கு இளி = ஒருவனுக்கு இழிவான குற்றமாவது,• அஃது இறந்து = அந்த மன ஊக்கத்தை இழந்துவிட்டு,• வாழ்தும் எனல் = சாதாரணமாக உயிர் வாழ்வோம் என்று எண்ணுவதாகும்.

மு.வரதராசன்

ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

பரிமேலழகர்

ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல். (ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. 'ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்' (நாலடி.செல்வம் நிலையாமை. 9) என்றார் பிறரும்,மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்'(குறள்.26)என்றாராயினும் ஈண்டு அவை அளவறிந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு 'உள்ளவெறுக்கை' என்றும், அது தன்னையே அதன் காரியமாகிய ஒளிஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.

Meaning in English

The light of life is mental energy; disgrace is his Who says, 'I 'ill lead a happy life devoid of this.'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout