Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 970

பொருட்பால்ஒழிபியல்97. மானம்

இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழுது ஏத்தும் உலகு.

iLivarin vAzhAta mAnam uTaiyAroLitozhu tEttum ulaku

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

தமக்கு ஏதேனும் இழிவு நேர்ந்தால் மானமிழந்து உயிர் வாழாமல் தம் உயிரைத் துறந்து தன்மானம் காக்கும் பெருமக்களின் அழியாத புகழை, உலகத்தார் அனைவரும் எக்காலத்திலும் கைகூப்பித் தொழுது போற்றுவார்கள்.

• இளிவரின் வாழாத = தமக்கு ஏதேனும் இழிவு நேர்ந்தால் மானமிழந்து வாழாமல் உயிரைத் துறக்கும்,• மானம் உடையார் = தன்மான உணர்வு மிக்க சான்றோர்களுடைய,• ஒளி = புகழ் வடிவத்தை,• உலகு தொழுது ஏத்தும் = உலகத்தார் அனைவரும் எப்போதும் கைகூப்பித் தொழுது போற்றுவார்கள்.

மு.வரதராசன்

தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.

பரிமேலழகர்

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகு - எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். ('புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி - எய்துவர,'(புறநா.27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.

Meaning in English

Who, when dishonour comes, refuse to live, their honoured memory Will live in worship and applause of all the world for aye

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout