மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின்.
mayirnIppin vAzhAk kavarimA annAruyirnIppar mAnam varin
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் உடம்பிலிருந்து ஒரு மயிர் நீங்கினாலும் மானத்தால் உயிர் வாழாத கவரிமான் போல, உயர்ந்த மான உணர்வு கொண்ட சான்றோர்கள் தம் சுயமரியாதைக்கு இழுக்கு வரும் சூழல் நேர்ந்தால் தம் உயிரையே மாய்த்துக் கொண்டு மானத்தைக் காப்பார்கள்.
• மயிர் நீப்பின் வாழா = தன் உடம்பில் உள்ள மயிர்த்திரளில் ஒரு மயிர் உதிர்ந்தாலும் உயிர் வாழாத,• கவரிமா அன்னார் = கவரிமான் போன்ற மான உணர்வுடைய பெரியோர்கள்,• மானம் வரின் = தன் சுயமரியாதைக்கு இழுக்கு வரும் நிலை ஏற்பட்டால்,• உயிர் நீப்பர் = தம் உயிரையே எளிதாகத் துறந்துவிடுவார்கள்.
மு.வரதராசன்
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
பரிமேலழகர்
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர்.(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.)
சாலமன் பாப்பையா
மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.
Meaning in English
Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day





