புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்றுஇகழ்வார்பின் சென்று நிலை.
pukazhinRAl puttENAT TuyyAtAl enmaRRikazhvArpin senRu nilai
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
சுயமரியாதையை இழந்து, தன்னை மதிக்காமல் இகழ்பவர்களின் பின்னே கையேந்திப் பணிந்து நிற்கும் வாழ்க்கை, இவ்வுலகில் நற்புகழையும் தராது; மறுமைக்குரிய மேலுலக நன்மையிலும் கொண்டு சேர்க்காது; அவ்வாறிருக்க மானமிழந்து நிற்பதால் வேறு என்ன பயன்?
• இகழ்வார்பின் சென்று நிலை = தன்னை மதிக்காமல் இகழ்கின்றவர்களின் பின்னே சென்று பணிந்து நிற்கும் இழிந்த நிலை,• புகழ் இன்று = இவ்வுலகில் நற்புகழையும் தராது,• புத்தேள் நாட்டு உய்யாது = மறுமைக்குரிய நல்வழியிலும் கொண்டு சேர்க்காது;• மற்று என் = அப்படியானால் மானத்தை இழந்து நிற்கும் அந்த நிலையால் வேறு என்னதான் பயன் விளையும்?
மு.வரதராசன்
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.
பரிமேலழகர்
இகழ்வார்பின் சென்று நிலை - மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்துப் புகழ் பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது - ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; மற்று என் - இனி அவனுக்கு அது செய்வது யாது?(புகழ் பயப்பதனைப் 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்றது என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?
Meaning in English
It yields no praise, nor to the land of Gods throws wide the gate: Why follow men who scorn, and at their bidding wait





