Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 963

பொருட்பால்ஒழிபியல்97. மானம்

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு.

perukkattu vENTum paNital siRiyasurukkattu vENTum uyarvu

A. C. Thinagaran

பொருள் / உரை

முருகா எளிய உரை

செல்வம் பெருகி வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கும்போது எல்லோரிடமும் பணிவோடு நடக்க வேண்டும்; செல்வம் குறைந்து வறுமையுற்ற காலத்தில் யாரிடமும் சுயமரியாதையை இழந்து கையேந்தாமல் கம்பீரமான மான உணர்வோடு வாழ வேண்டும்.

• பெருக்கத்து = செல்வம் பெருகி உயர்ந்த நிலையில் உள்ள காலத்தில்,• பணிதல் வேண்டும் = எல்லாரிடத்திலும் அடக்கமும் பணிவும் கொண்டிருக்க வேண்டும்;• சிறிய சுருக்கத்து = செல்வம் குறைந்து வறுமை வந்துவிட்ட காலத்தில்,• உயர்வு வேண்டும் = எவரிடமும் தன்மானம் இழந்து பணியாத உயர்வான உள்ளம் கொண்டிருக்க வேண்டும்.

மு.வரதராசன்

செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

பரிமேலழகர்

பெருக்கத்துப் பணிதல் வேண்டும் - குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும்; சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும் - குறைந்த நல்குரவுளதாயவழிப் பணியாமை வேண்டும், (பணியாமை - தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமைச் சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.

Meaning in English

Bow down thy soul, with increase blest, in happy hour; Lift up thy heart, when stript of all by fortune's power

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout