Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 962

பொருட்பால்ஒழிபியல்97. மானம்

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர்.

sIrinum sIralla seyyArE sIroTupErANmai vENTu pavar

Reashma

பொருள் / உரை

முருகா எளிய உரை

நற்புகழோடு கூடிய சிறந்த மான உணர்வையும் ஆண்மையையும் நிலைநிறுத்த விரும்புகின்றவர்கள், ஒரு செயலால் தமக்குப் பெரும் புகழே வருவதாக இருந்தாலும், தம் சுயமரியாதைக்குப் பொருந்தாத இழிவான செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

• சீரொடு = நற்புகழோடு கூடிய,• பேராண்மை வேண்டுபவர் = சிறந்த மான உணர்வையும் நிலைநாட்ட விரும்புகின்றவர்கள்,• சீரினும் = பெரும் புகழையே தருகின்ற வழியிலும்,• சீர் அல்ல செய்யார் = தம் குடிப்பெருமைக்கு ஒவ்வாத இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

மு.வரதராசன்

புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

பரிமேலழகர்

சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.

Meaning in English

Who seek with glory to combine honour's untarnished fame, Do no inglorious deeds, though men accord them glory's name

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout