சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகுலம்பற்றி வாழ்தும்என் பார்.
salampaRRis sAlpila seyyArmA saRRakulampaRRi vAzhtumen pAr
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
பழியில்லாத தம் முன்னோரின் நற்குடிப் பெருமையோடு வாழ விரும்புபவர்கள், வறுமையால் சூழப்பட்ட காலத்திலும் வஞ்சக எண்ணம் கொண்டு தம் பெருமைக்குத் தகாத இழிசெயல்களைச் செய்ய மாட்டார்கள்.
• மாசு அற்ற குலம் பற்றி = குற்றமற்ற தம் குடும்பப் பாரம்பரியப் பெருமையோடு,• வாழ்தும் என்பார் = வாழ வேண்டும் என்று கருதுபவர்கள்,• சலம் பற்றி = வறுமை வந்த காலத்திலும் வஞ்சனை நெஞ்சத்தோடு,• சால்பு இல = தம் மரபுக்குத் தகாத இழிவான செயல்களை,• செய்யார் = ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
மு.வரதராசன்
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.
பரிமேலழகர்
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்ற கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார். (அமைவின்மை அம் மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.
Meaning in English
Whose minds are set to live as fits their sire's unspotted fame, Stooping to low deceit, commit no deeds that gender shame





