அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர்.
aTukkiya kOTi peRinum kuTippiRantArkunRuva seytal ilar
Ayushree Warrier
பொருள் / உரை
முருகா எளிய உரை
கோடி கோடியாக அளவற்ற செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பெருமைக்குரிய நற்குடியில் பிறந்தவர்கள் தம் குடும்பப் பெருமைக்கும் நற்பெயருக்கும் குறைவு தரும் இழிவான செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
• அடுக்கிய கோடி பெறினும் = பல கோடிக் கணக்கான செல்வத்தை ஒன்றாக அடுக்கிப் பெறுவதாக இருந்தாலும்,• குடிப்பிறந்தார் = நற்குடியில் பிறந்த பெருமை உடையவர்கள்,• குன்றுவ = தம் குடியின் பெருமைக்கும் ஒழுக்கத்திற்கும் இழுக்கு தரும் இழிசெயல்களை,• செய்தல் இலர் = ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
மு.வரதராசன்
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
பரிமேலழகர்
அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார். ('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.)
சாலமன் பாப்பையா
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.
Meaning in English
Millions on millions piled would never win The men of noble race to soul-degrading sin





